தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வரி செலுத்தியவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ள 1.48 லட்சம் கோடி ரூபாய்!

டெல்லி: வரி செலுத்திய ஒரு கோடிக்கும் மேலானவர்களுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாயை வருமான வரி துறை திருப்பி அளித்துள்ளது.

வரி
வரி

By

Published : Dec 16, 2020, 9:55 PM IST

டிசம்பர் 14 வரை, வரி செலுத்திய 1.02 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாயை வருமான வரி துறை திருப்பி அளித்துள்ளது. அதில், 45,264 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரியும் 1.03 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தியவர்களுக்கு ரீஃபண்ட் செய்த வருமான வரித்துறை

இது குறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 14 வரை, வரி செலுத்திய 1.02 கோடி பேருக்கும் அதிகமானவர்களுக்கு 1.48 லட்சம் கோடி ரூபாயை மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி அளித்துள்ளது. ஒரு கோடியே இரண்டாயிரத்து 982 வழக்குகளில் 45,264 கோடி ரூபாய் தனிநபர் வருமான வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்து 854 வழக்குகளில் ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 10 கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details