பெட்ரோல், டீசல் பயன்பாடு காரணமாகக் காற்று மாசு, புவி வெப்பமாதல் உள்ளிட்ட பல பிரச்னைகளை உலக நாடுகள் சந்தித்துவருகின்றன. இதனால் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் பல நாடுகளின் அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 12 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடாக குறைக்கப்பட்டது.
இதன் கரணமாக பல்வேறு மின்சார வாகனங்களின் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டாடா மோட்டாரஸ் நிறுவனம், தனது மின்சாரக் காரான டாடா டைகோர் (TATA Tigor) மாடலின் விலையைக் குறைத்துள்ளது.
டைகோர் மாடலின் XE, XM, XT ஆகிய மூன்று மாடல்களுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பின் காரணமாக மும்பையில் ரூ.12.35 லிருந்து 12.71 லட்சமாக இருந்த டைகோர் காரின் விலை தற்போது ரூ.11.58 லிருந்து 11.92 லட்சமாக குறைந்துள்ளது.