கரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் இந்தியப் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இன்றும் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 810.98 புள்ளிகள் குறைந்து, 30,579.09 எனவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 230.35 புள்ளிகள் குறைந்து 8,967.05 எனவும் வர்த்தகமாகியுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் கண்டிராத கடும் சரிவைப்பங்குச்சந்தை சந்தித்துவருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் நிஃப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாவது இதுவே முதல் முறையாகும்.