டெல்லி: 2020 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் ரூ.57 கோடி நிகர இழப்பை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ .77.9 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
இந்நிலையில், தற்போதைய மொத்த வருமானம் ரூ.2,907 கோடியாக உள்ளது. இது 2 ஆம் நிதியாண்டில் ரூ.1,305 கோடியாக இருந்தது. அதே ஒப்பீட்டு காலத்தில், செலவுகள் ரூ.1,964 கோடியாக இருந்தன. இதுவே, கடந்தாண்டு 1,418 கோடியாக இருந்தது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், “சரக்கு வணிகம் மீள்வதாலும், பயணிகள் கணிசமாக திரும்புவதாலும், செலவினங்களைக் கட்டுப்படுத்துவதாலும், இந்தக் காலாண்டில் இழப்புகளை கணிசமாகக் குறைக்க முடிந்தது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் நடைபெற்று வருவதால், விமானத் துறைகளில் வலுவான மறுமலர்ச்சியைக் காண்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: வேலையா? உயிரா? எதை விடப் போகிறாய்? ஸ்பைஸ்ஜெட் ஊழியருக்கு மிரட்டல்