கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் இந்தியன் ரயில்வே தனது சேவையை நிறுத்திக் கொண்டது. அதன் பின்னர், ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலாண்டில் தெற்கு ரயில்வே 1.4 கோடி டன் சரக்கை எடுத்துச் சென்றுள்ளது என்றும், இதன் மூலம் 1,167. கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் மாதம் மட்டும் 20 லட்சம் டன் சரக்கை எடுத்துச் சென்றதன் மூலம் 162.42 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.
அக்டோபர் மாதம் அதிகபட்சமாக தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு 2.61 லட்சம் டன் அரிசி மற்றும் நெல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை எடுத்துச் செல்ல 56 சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.