தமிழ்நாடு

tamil nadu

10 கோடி தடுப்பூசிகளை மலிவு விலையில் தயார் செய்யவுள்ள இந்திய நிறுவனம்

By

Published : Aug 8, 2020, 4:21 AM IST

டெல்லி: 92 நாடுகளுக்கு சுமார் 10 கோடி தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா என்ற நிறுவனம் பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

COVID
COVID

கரோனா தடுப்பூசி பரிசோதனையில் சர்வதேச நாடுகளைச் சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த தடுப்பூசி தயாரிப்பில் புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் அஃப் இந்தியா முக்கிய பங்காற்றிவருகிறது .

இந்த சீரம் நிறுவனம் பில்கேட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமார் ரூ.225க்கு மலிவு விலை தடுப்பூசிகளை தயாரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

92 நாடுகளுக்கு சுமார் 10 கோடி தடுப்பூசிகளை இந்த நிறுவனம் தயாரிக்கப் போவதாக அந்நிறுனத்தின் சி.இ.ஓ அதர் பூனாவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிகள் 2021ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்தரா ஸெனேக்கா என்ற தடுப்பூசியின் இரண்டாம், மூன்றாம் கட்ட சோதனையை சீரம் மேற்கொள்கிறது. இந்திய அரசின் மருத்துக ஒழுங்காற்று ஆனையம் அளித்துள்ள ஒப்புதலின்படி, இந்த நிறுவனம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான தன்னார்வளர்களிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுமட்டுமின்றி இந்தியாவிலேயே பாரத் பயோடெக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி பரிசோதனையில் முக்கியக் கட்டங்களை எட்டியுள்ளன.

இதையும் படிங்க:தேசத்தின் துயர சூழலை பிரதிபலிக்கிறது ரிசர்வ் வங்கி - ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details