மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 554 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 195 புள்ளிகளும் சரிவுடன் இன்றைய வர்த்தகத்தை நிறைவு செய்தன.
கரோனா அச்சுறுத்தல் உலகெங்கும் நீடித்து வரும் நிலையில், இன்னும் பத்து நாள்களில் வர இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் எப்படி இருக்குமோ என்கின்ற ஐயம் நிலவி வருகிறது.
கிடைத்தவரை லாபம் என விற்று லாபத்தை எடுக்கும் வகையில் சரிவு கண்ட சந்தைகள் இருப்பினும், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ லம்போர்டு, ஹெச்.டி.எப்.சி வங்கி ஆகியன லாபம் தந்து முடிந்தன.
வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 60 ஆயிரத்து 754 புள்ளிகளிலும் நிஃப்டி 18 ஆயிரத்து 113 புள்ளிகளும் பெற்று நிறைவடைந்தன.
இதையும் படிங்க: தங்கம், வெள்ளி விலை நிலவரம்