தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஒரே மாதத்தில் 2.57 சதவிகிதம் குறைந்த சில்லறை பணவீக்கம்! - inflation

டெல்லி: இந்தாண்டு ஜனவரி மாதத்தில், 7.59 சதவிகிதமாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் 6.58 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

consumer inflation
consumer inflation

By

Published : Mar 13, 2020, 1:38 PM IST

பொருளாதாரத்தில் சில்லறை பணவீக்கம் என்பது சந்தையிலுள்ள பொதுவான பொருள்களின் அதாவது, காய்கறிகள், பழங்கள், எரிபொருள் விலை உயர்வால் அந்த நாட்டின் நாணயத்தின் பொருள்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்துபோவதைக் குறிக்கும்.

நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்துவரும் சூழலில், கடந்த சில மாதங்களாகவே சில்லறை பணவீக்கம் உயர்வை சந்தித்துவந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் 7.59 சதவிகிதமாக இருந்த சில்லறை பணவீக்கம் கடந்த மாதம் 6.58 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ஒரே மாதத்தில் சில்லறை பணவீக்கம் 2.57 சதவிகிதமாக குறைந்ததால் மகிழ்ச்சி என்றும், இதனைச் சில மாதத்தில் நான்கு விழுக்காடாகக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பங்குச்சந்தை வீழ்ச்சி, தங்கம் விலை குறைவு!

ABOUT THE AUTHOR

...view details