தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஜிடிபி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்பு - ரிசர்வ் வங்கி தகவல்

மும்பை: ஜிடிபி வளர்ச்சி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி

By

Published : Oct 9, 2020, 12:22 PM IST

வட்டி வகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெறும். மும்பையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஜிடிபி வளர்ச்சி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையவுள்ள நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 9.5 விழுக்காடு குறைய வாய்ப்புள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், பொருளாதார வளர்ச்சி பெரும் சரிவை சந்தித்தது. ஆனால், தற்போது நாடு நம்பிக்கையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம், ரெப்போ ரேட் 4 விழுக்காடாக தொடரும். ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.5 விழுக்காடாக இருக்கும்" என்றார்.

வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படாத காரணத்தால், செப்டம்பர் மாதம் பண வீக்கம் உயர்ந்தே காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் மூன்றாவது, நான்காவது காலாண்டில் குறைய வாய்ப்புள்ளது.

நிதி கொள்கை குழுவில் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அக்டோபர் 1ஆம் தேதி நிறைவடையவேண்டிய கூட்டம் இன்று நிறைவடைந்தது. ஆஷிஸ் கோயல், ஜெயந்த் வர்மா, ஷாசங் பீடே ஆகியோர் நிதி கொள்கை குழுவில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். ரெப்போ ரேட் குறைந்தால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் வட்டி விகிதமும் குறையும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details