தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

நெட்மெட்ஸ் நிறுவனத்தின் 620 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கும் ரிலையன்ஸ்!

மின்னணு மருந்து விற்பனை நிறுவனமான நெட்மெட்ஸின் பெரும்பான்மைப் பங்களை, 620 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் கையகப்படுத்தவுள்ளது.

நெட்மெட்ஸ், ரிலையன்ஸ்
நெட்மெட்ஸை வாங்கும் ரிலையன்ஸ்

By

Published : Aug 19, 2020, 4:36 PM IST

நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் வாங்கவுள்ளது.

இந்தப் பங்கு வர்த்தகத்தின் மதிப்பு 620 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என்று ரிலையன்ஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் வைட்டாலிக் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் சுமார் 60 விழுக்காடு பங்குகளையும், அதன் துணை நிறுவனங்களான திரேசரா ஹெல்த் பிரைவேட் லிமிடெட், நெட்மெட்ஸ் மார்க்கெட் பிளேஸ் லிமிடெட், தாதா பார்மா டிஸ்டிரிபியூஷன் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் 100 விழுக்காடு நேரடி பங்கு உரிமைகளையும் ரிலையன்ஸ்பெறுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வைட்டாலிக் ஹெல்த் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், கூட்டாக நெட்மெட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.

"டிஜிட்டல், சில்லறை மற்றும் தொழில்நுட்ப தளங்களின் ஒருங்கிணைந்த பலத்துடன், அனைவருக்கும் மதிப்புமிக்க சேவையை உருவாக்க நாங்கள் பாடுபடுவோம். அதே நேரத்தில் நுகர்வோருக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குவோம்" என்று நெட்மெட்ஸ் நிறுவனரும் தலைமை நிர்வாக அலுவலருமான பிரதீப் தத்தா கூறியுள்ளார்.

நெட்மெட்ஸ் என்பது முழு உரிமம் பெற்ற மின்னணு மருந்தகத் தளமாகும். இது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுடன் பிற ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்தியா முழுவதிலும் 20ஆயிரம் அஞ்சல் குறியீடு எண்களுக்கு தங்கள் சேவையை நிறுவனம் வழங்கி வருகிறது.

நெட்மெட்ஸ் மின்னணு நிறுவனத்தை, சென்னையைச் சேர்ந்த தாதா பார்மா நிறுவனம் விளம்பரப்படுத்துகிறது. 1914ஆம் ஆண்டு முதல் 100ஆண்டுகளுக்கும் மேலாக மருந்து துறையில் செயலாற்றி வரும் இந்நிறுவனம் முதலில் சில்லறை மருந்து வணிகத்திலும், பின்னர் 1972ஆம் ஆண்டில் மருந்து உற்பத்தியிலும் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details