நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) ஆகியவை விரைவு பணப் பரிவர்த்தனை செய்யும் முறைகளாகும்.
இரண்டு லட்சம், அதற்கும் மேற்பட்ட தொகையை பரிமாற்றம் செய்ய ஆர்டிஜிஎஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. 50 ஆயிரத்துக்கு குறைவான பணத்தை நெஃப்ட் மூலம் பரிமாற்றம் செய்யலாம்.

இந்நிலையில், இந்த விரைவு பரிமாற்ற முறைகளுக்கு வசூலிக்கப்பட்டுவந்த கட்டணங்களை நீக்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இணைய வழி பணப் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.