டெல்லி:இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் பாதிப்பு, உயிரிழப்பு பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது.
பலரும் சிகிக்சைக்கான செலவை எதிர்கொள்ள முடியாமல் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டனர். இதை போக்கும் விதமாக பொதுத்துறை வங்கிகள் கரோனா சிகிச்சை கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.