பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.19,500 கோடி உதவித்தொகையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். பின்னர் விவசாயிகளிடம் பேசிய பிரதமர் நாட்டின் சமையல் எண்ணெய் தேவை குறித்து பேசினார்.
இதுகுறித்து பேசிய அவர், ”அரசி, கோதுமை போன்ற உணவு தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. ஆனால் சமையல் எண்ணெய்யை பொறுத்தவரை இந்தியா இன்னும் இறக்குமதியை சார்ந்தே உள்ளது. மொத்த இறக்குமதியில் 55 விழுக்காடு பாமாயில் தேவைக்காகவே உள்ளது. பாமாயில் இறக்குமதிக்காக அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடுகிறது.