தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

முதல் காலாண்டில் அமோக லாபம் கண்ட ஓ.என்.ஜி.சி. - வணிக செய்திகள்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ரூ.4,335 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

ONGC
ONGC

By

Published : Aug 14, 2021, 6:47 PM IST

நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி.(ONGC-Oil and Natural Gas Corp) தனது முதல் காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ரூ.4,335 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

இது கடந்த காலாண்டை விட 772.2 விழுக்காடு அதிகமாகும். கோவிட்-19 பொது முடக்கம் காரணமாக எரிபொருள் விற்பனை பெரும் சரிவைக் கண்டது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுப்போக்குவரத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கடந்த காலண்டை விட இரு மடங்கு அதிகமாகியுள்ளதால் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அமோக லாபத்தை கண்டுள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் 77 விழுக்காடு உயர்ந்து ரூ.23,022 கோடியாக உள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னணி பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் அன்மையில் ஓ.என்.ஜி.சி.யுடன் இணைக்கப்பட்டது. இந்த காலாண்டு நிதிநிலை அறிக்கையில் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் கணக்குகளே வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வரலாற்றில் முதல்முறையாக 55,000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்

ABOUT THE AUTHOR

...view details