தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வேலையிழப்பு குறித்து அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இல்லை - பிரகாஷ் ஜவடேகர் - No confirmed data available on auto industry job losses

டெல்லி: வேலையிழப்பு குறித்து மத்திய அரசிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Javadekar press meet
Javadekar press meet

By

Published : Feb 4, 2020, 10:28 AM IST

2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்யும் அளவுக்கு எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருன்றனர்.

இது தொடர்பாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்திய பொருளாதாரம் சற்று சரிவடைந்துள்ளதால் பெரும்பாலான நிறுவனங்கள் தடுமாறி உள்ளன. இது தற்காலிகமானது, இதில் இருந்து வெளிவருவதற்கானவிரைவில் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

மேலும் ஆட்டோமொபைல் துறையும் சற்று சரிந்துள்ளது. ஆனால் இது நீண்ட கால சறுக்கல் இல்லை. 2018ஆம் ஆண்டு முதல் காலாண்டு முடிவில் 20.3 மில்லியன் விற்பனையான வாகனங்கள் 2019ஆம் ஆண்டு அதே காலாண்டு முடிவில் 17.1 மில்லியன் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.

தற்போது ஆட்டோமொபைல் துறைகள் சற்று உயர்ந்து வருவதாக தெரியப்படுகிறது. இது வரை ஆட்டோமொபைல் துறையில் இருந்து வேலை இழப்பு குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்ஜெட் 2020 எதிரொலி: மாநில அரசுகளுக்கு 1.53 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

ABOUT THE AUTHOR

...view details