தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 20, 2019, 1:51 PM IST

ETV Bharat / business

'உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி குறைப்பு' - நிர்மலா சீதாராமன்

பனாஜி: உள்நாட்டிலுள்ள நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 22 விழுக்காடாக  குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala sitharaman

மத்திய அரசின் ஜிஎஸ்டியின் 37ஆவது கவுன்சில் கூட்டம் இன்று கோவாவில் நடைபெற்றது. இந்நிலையில், அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • வருமான வரி சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்தத்தின்படி 2019-20 நிதியாண்டிலிருந்து, வேறு எந்தச் சலுகையும் பெறாத உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 22 விழுக்காடாகக் குறைக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் செலுத்தும் அதிகபட்ச வரிகள் செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்பட 25.17 விழுக்காடாக இருக்கும்.
  • 'மேக் இன் இந்தியா' திட்டத்தைப் பிரபலப்படுத்தும்விதமாக, 2019ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பின் தொடங்கப்படும் நிறுவனங்கள், உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய வரவேற்கப்படுகின்றன. மேலும், அவ்வாறு செய்யும் முதலீடுகளுக்கு 15 விழுக்காடு வருமான வரி செலுத்தினால் போதும். இந்தச் சலுகையைப் பெற வேண்டும் என்றால் வேறு எந்தச் சலுகையையும் அந்த நிறுவனம் பெற்றிருக்கக் கூடாது. மேலும் மார்ச் 2023ஆம் ஆண்டுக்குள் அந்த நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கான வரி ,செஸ் மற்றும் சர்சார்ஜ் உள்ளிட்டவற்றைச் சேர்த்து 17.01 விழுக்காடாக இருக்கும்.
  • பெருநிறுவனங்கள் செலவழிக்க வேண்டிய சி.எஸ்.ஆர். (CSR) எனப்படும் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வுக்கான இரண்டு விழுக்காடு செலவினங்களை விரிவுபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இப்போது சி.எஸ்.ஆர். நிதியை மத்திய மற்றும் மாநில அரசின் எந்தவொரு நிறுவனங்களுக்கும் செலவிடலாம்.
  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சலுகைகளை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகளுக்குப் பின் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்துவந்த பங்குச்சந்தை பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: ஐநா சபையில், பாக். தலைகுனியும்! இந்தியா தலைநிமிரும்!

ABOUT THE AUTHOR

...view details