தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரூ.1,200 செல்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்க கோரிக்கை - ஜிஎஸ்டி

டெல்லி: ரூ.1200 விலை கொண்ட அடிப்படை செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Mobile industry seeks GST rate cut for phones up to Rs 1,200
Mobile industry seeks GST rate cut for phones up to Rs 1,200

By

Published : Dec 12, 2019, 3:02 PM IST

ஜிஎஸ்டி கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ரூ.1200 ரக செல்போன்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வகை கைபேசிகளின் மதிப்பு பங்கு சுமார் ரூ .12,000 முதல் ரூ.15,000 கோடியாக உள்ளது.

இது மொத்த உள்நாட்டு மதிப்பு அளவு சந்தையில் சுமார் 6.5-8 சதவீதமாகும். ஐ.சி.இ.ஏ. தகவலின்படி, இது டிஜிட்டல் இந்தியா நோக்கத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி ஆட்சி நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர்த்து மொபைல் கைபேசிகள் குறைந்த வாட் வரி (மதிப்பு கூட்டப்பட்ட வரி) வீதத்திற்கு 4-5 சதவீதம் காணப்பட்டது.

இதையும் படிங்க: நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடி.!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details