தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தொடர்ந்து 4ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

மும்பை: இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து 4ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!
தொடர்ந்து 4ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

By

Published : Nov 5, 2020, 6:11 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று 41,112.12 புள்ளிகளுடன் ஆரம்பத்திலேயே ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் மதியம் திடீரென்று புள்ளிகள் உயர்ந்ததால், இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 724.02 புள்ளிகள் உயர்ந்து 41,340.16 புள்ளிகளில் முடிவடைந்தது. இது நேற்றைய புள்ளிகளிலிருந்து 1.78 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதைப்போன்று தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 219.05 புள்ளிகள் உயர்ந்து 12,062.40 புள்ளிகள் தனது வர்த்தகத்தை நிறைவு செய்தது. இது நேற்றைய புள்ளிகளிலிருந்து 1.84 விழுக்காடு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் 6.17 விழுக்காடு உயர்ந்தது. மேலும், ஹிண்டல்கோ, சிபின், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.

மறுபுறம் ஹெச்.டி.எஃப்.சி. லைப், ஹெர்மோட்டோகோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

தொடர்ந்து 4ஆவது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச்சந்தை!

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து ரூ.47,900-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 1, 300 ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ ரூ.62,500க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமின்றி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க...மொத்தம் 15 கார்கள்தான்! மினி ஜான் கூப்பர் ஒர்க்ஸ் ஹாட்ச் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details