மக்களவையில் இன்று காப்பீட்டுச் சட்டத்திருத்த மசோதா, 2021-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்தார். காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 விழுக்காட்டிலிருந்து 74 விழுக்காடாக உயர்த்த இந்த மசோதாவில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த மசோதா அறிமுகமான பின், அது தொடர்பாக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி, இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு இந்த மசோதா பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்றார்.