தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் கோடாக் மகேந்திரா! - கோடாக் மகேந்திரா வங்கி சம்பளம் குறைப்பு

மும்பை: தனியார் வங்கியான கோடாக் மகேந்திரா, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு 10 விழுக்காடு ஊதியத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

Kotak Mahindra Bank declares 10 pc pay cut for staff with over Rs 25 lakh annual salary  business news  Kotak Mahindra Bank salary cut  covid 19 impact  கோடாக் மகேந்திரா வங்கி சம்பளம் குறைப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி
Kotak Mahindra Bank declares 10 pc pay cut for staff with over Rs 25 lakh annual salary business news Kotak Mahindra Bank salary cut covid 19 impact கோடாக் மகேந்திரா வங்கி சம்பளம் குறைப்பு கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார நெருக்கடி

By

Published : May 7, 2020, 11:51 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று நோய் ஏற்படுத்திய உலகளாவிய பொருளாதார நெருக்கடி காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு மற்றும் ஆள் குறைப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாத திண்டாட்டம் அடுத்த மூன்று வாரத்தில் 27 விழுக்காட்டை எட்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தனியார் வங்கியான கோடாக் மகேந்திரா, ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பெறும் ஊழியர்களின் ஊதியத்தில் 10 விழுக்காடு குறைக்கத் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து வங்கியின் மனிதவள அலுவலர் சுக்ஜித் எஸ் பாஸ்ரிச்சா, “கோவிட்-19 பெருந்தொற்று முதலில் இரண்டு அல்லது மூன்று மாத பிரச்னையாக காணப்பட்டது.

தற்போது அது கடுமையானப் பாதிப்புகளை கொண்ட தொற்று நோயாக மாறியுள்ளது. இதன் காரணமாக வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் கடும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வணிக நிலைத்தன்மையைக் கவனத்தில் கொண்டு, சம்பளத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைக்கு வங்கி திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து சக ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.25 லட்சத்துக்கும் அதிகமான சம்பளம் பெறுவோருக்கும் 10 விழுக்காடு வரை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இது நடப்பாண்டின் முதல் நிதியாண்டு முதல் அடுத்தாண்டு வரை அமலில் இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சரிவில் இந்திய பங்குச் சந்தை!

ABOUT THE AUTHOR

...view details