கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரோனா பாதிப்பால் சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் கர்நாடக அரசு தெரிவித்தது.
அதன்படி விசைத்தறித் தொழிலாளர்கள் மற்றும் காய்கறி, பழ விவசாயிகள் உட்பட சிலருக்கு 162 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசாமி (Law and Parliamentary Affairs Minister J C Madhuswamy), 'கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் வழங்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு முறை நிவாரணமாக 2,000 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.