கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்திய வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்கள் தொடர்பாக மஹாராஷ்டிராவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, கரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் வேலை தேடுவோரின் மனநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்டுத்தியுள்ளது. பெரும்பாலானோர் ப்ரீலேன்சிங் எனப்படும் நிறுவனத்தைச் சாராத வேலைகளை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பணியாளர்களின் தேவைக்கேற்ப வீட்டிலிருந்து கொண்டே வேலைசெய்யும் சூழலை இந்த ப்ரீலேன்சிங் வேலைகள் உருவாக்கித் தருவதால் இதற்கான ஆர்வம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக வொர்க் ஃப்ரம் ஹோம் எனப்படும் வீட்டிலிருந்தே பணி செய்வதில் இளைஞர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற வேலை தேடுவோரின் எண்ணிக்கை கடந்தாண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் இளைஞர்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இது தொடர்பான ஆன்லைன் வகுப்புகளில் இளைஞர்கள் அதிகம் பயிற்சி எடுத்துவருகின்றனர் என ஆய்வு தெரிவிக்கிறது.
இதையும் படிங்க:பினராயி 75: இந்திய இடதுசாரி அதிகார அரசியலின் ஒரே ஆயுதமான 'பிரியப்பட்ட சகாவு'