நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது கிராமப்புற ஏழைகள் இலவசமாக வங்கிக்கணக்கை தொடங்க ஜன்தன் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தினை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தத் தொடர் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. குறிப்பாக பிரதமர் மோடி இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
ரூ.1 லட்சம் கோடி இருப்புத்தொகையை எட்டிய ஜன்தன் வங்கிக் கணக்கு - ஒரு லட்சம் கோடி
டெல்லி: கிராமப்புற ஏழை மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தின் கீழ் இயங்கும் வங்கிக்கணக்குகளில் இருப்புத்தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இந்நிலையில், ஜன்தன் வங்கிக்கணக்கு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள ரூ.36.06 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை 1 லட்சத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 36.06 கோடி வங்கிக்கணக்கில் 50 சதவிகித கணக்கை பெண்கள் வைத்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
மேலும், 28.44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூ பே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அரசின் மானியம், உதவித்தொகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.