தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சீனாவில் தடை செய்யப்பட்ட இந்திய ஊடகங்கள் - இந்திய செய்தித்தாள் சங்கம் கண்டனம்!

டெல்லி: சீனாவில் இந்திய ஊடகங்ளின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதற்கு கண்டத்தைத் தெரிவித்துள்ள இந்திய செய்தித்தாள் சங்கம், இது குறித்து உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

INS slams China
INS slams China

By

Published : Jul 2, 2020, 5:05 PM IST

இந்தியா - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் இரு தரப்பு ராணுவத்தினருக்குமிடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சீன தரப்பிலும் இந்த மோதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஏற்பட்ட பதற்றம் குறைவதற்கு முன், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி இந்தியா 59 செயலிகளுக்கு தடை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய செய்தித்தாள்களுக்கும் ஊடக வலைதளங்களும் சீனா தடை விதித்து.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய செய்தித்தாள் சங்கம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய செய்தித்தாள் சங்கத்தின் தலைவர் சைலேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி VPN மூலம் இந்திய ஊடகங்களின் வலைதளங்களை அணுகுவதையும் சீன முடக்கியுள்ளது.

எனவே, இந்தியாவில் சீன ஊடகங்களை பொதுமக்கள் அணுகுவதை தடை செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும். இந்திய ஊடக நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள முதலீடுகளை உடனடியாக முறைப்படுத்தவும் தடுக்கவும் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோசமாகும் கரோனா பாதிப்பு: தொழிலாளர்கள் மீள்வது கடினம் - சர்வதேச தொழிலாளர் அமைப்பு!

ABOUT THE AUTHOR

...view details