தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

தடுப்பூசி போட்டுக்கொண்டால் விமான கட்டணத்தில் சலுகை! - இண்டிகோ

கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வை பயணிகளிடம் விதைக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையை இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

IndiGo
IndiGo

By

Published : Jun 23, 2021, 3:35 PM IST

டெல்லி: இண்டிகோ நிறுவனம் பயணிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகை அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இண்டிகோ பயணிகள் இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை எடுத்திருந்தாலும் 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இண்டிகோவின் தலைமை வருவாய் அலுவலர் சஞ்ஜய் குமார் கூறுகையில், “நாட்டிலேயே மிகப்பெரிய பயணிகள் விமான நிறுவனமாக இண்டிகோ விளங்குகிறது. அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பில் முழுகவனம் செலுத்துகிறோம்.

மேலும் தடுப்பூசி விழிப்புணர்வில் எங்களது செயல்பாடுகளும் இருக்க விரும்புகிறோம். அந்த வகையில் இந்தக் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது 18 வயதுக்கு மேற்பட்ட கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும்.

ஆகவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயணிகள், தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரங்களை பயணசீட்டு பெறும்பொது சமர்பிக்க வேண்டும்” என்றார். இண்டிகோ விமான நிறுவனத்தில் 35 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 28 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த நபரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details