தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

9.2% ஆக வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரம் - நிதி ஆயோக்

இந்தியப் பொருளாதாரம் 9.2 விழுக்காடாக வளர்ந்துவருவதாகவும், இந்த வளர்ச்சி இதேபோல வரும் ஆண்டுகளில் தொடரும் எனவும் நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக்

By

Published : Feb 22, 2022, 10:46 PM IST

டெல்லி: இது குறித்து அவர் கூறுகையில், "வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் உற்பத்தியில் 520 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்து, இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியின் ஒரு பகுதியாக மாற்றும். இன்றைய இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப இடர்ப்பாடுகளைச் சந்தித்துவருகிறது.

நாட்டின் பொருளாதாரம் 9.2 விழுக்காடு அளவுக்கு வளர்ந்துவருகிறது. வருமாண்டுகளில் இதே விகிதத்திலேயே பொருளாதார வளர்ச்சித் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் வேகமாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் ஒன்று.

செயல்திறனை அதிகரிக்க நாடு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி), திவால்நிலை குறியீடு, பெருநிறுவன வரிகளைக் குறைத்தல் போன்ற பல சீர்திருத்தங்கள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

இது இந்தியாவை உலகளாவிய உற்பத்திச் சாதனை, உற்பத்தி மையத்திற்கு இட்டுச் செல்கிறது. இந்தியா ஏற்கனவே 814 மில்லியன் இணைய பயனர்கள், 85 யூனிகார்ன்களுடன் தொழில்நுட்பத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் வெற்றிபெற்றுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ஆப்பிளின் M2 சிப் இந்தாண்டு அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details