தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ஆசியாவிலேயே இந்தியாவுக்கு மட்டும் ஏறுமுகம்; புள்ளி விவரம் சொல்லும் தகவல்! - ஏற்றுமதி வளர்ச்சி

ஆசிய நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி சதவிகிதம் கடந்த காலாண்டை விட அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி

By

Published : Aug 1, 2019, 6:01 PM IST

Updated : Aug 1, 2019, 7:08 PM IST

2017ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான சர்வதேச ஏற்றுமதி சதவிகிதத்தில் 1.58 விழுக்காடாக இருந்த இந்தியாவின் பங்களிப்பு 1.71 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதனை 2017ஆம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய நாடுகளின் ஏற்றுமதி குறைந்துள்ளபோதும், இந்தியாவின் ஏற்றுமதி மட்டும் அதிகரித்திருக்கிறது.

இதுகுறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், "இந்தியா சர்வதேச ஏற்றுமதி சங்கிலியில் இன்னும் தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளவில்லை. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெறும் வர்த்தக போர் இந்தியாவை பெரியளவில் பாதிக்கவில்லை" என்றார்.

இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அடுத்த நிலையில் சீனா இருந்தாலும், மற்ற ஆசிய நாடுகளைப் போல இந்தியாவின் ஏற்றுமதி சீனாவைச் சார்ந்து இருப்பதில்லை. தென் கொரியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சுமார் 30 சதவிகிதமும், ஜப்பானின் ஏற்றுமதியில் சுமார் 20 சதவிகிதமும், சிங்கப்பூர் ஏற்றுமதியில் 20 சதவிகிதமும் சீனாவைச் சார்ந்திருக்கிறது.

ஆனால் இந்தியாவின் ஏற்றுமதியோ வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே சீனாவைச் சார்ந்துள்ளது. அதனால் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நடக்கும் வர்த்தகப் போரில் இந்தியாவின் ஏற்றுமதி பெரியளவில் பாதிக்காமல் இருக்கிறது.

Last Updated : Aug 1, 2019, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details