தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

திருப்பூர் பின்னலாடை தொழிலை பாதிக்கும் பிரெக்சிட்! - திருப்பூர் பின்னலாடை

திருப்பூர்: பிரிட்டனில் நடக்கும் அரசியல் பிரச்னைகளால், திருப்பூர் பின்னலாடைத் தொழிலில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பார்ப்போம்.

திருப்பூரும் பிரக்சிட்டும்

By

Published : Mar 21, 2019, 10:11 PM IST

Updated : Mar 23, 2019, 10:10 PM IST

திருப்பூர் பின்னலாடை

உலகில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் சமூக, அரசியல், வர்த்தக பிரச்னைகள் நம் வீட்டிலும் எதிரொலிக்கும். இந்தியா பொக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தியபோது நாடே அதைக் கொண்டாடியது. ஆனால் அதன்பின் அமெரிக்கா இந்திய பொருட்கள் மீது விதித்த பொருளாதார தடையால் மதுரை செல்லூர் பகுதிகளில் இருந்த ஏராளமான கைத்தறி நெசவுக் கூடங்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்தன. தற்போது இதுபோன்றொரு பாதிப்பு திருப்பூரையும் எட்டிப்பார்க்கிறது. ஏற்கெனவே ஜிஎஸ்டி வரி விதிப்பால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ள திருப்பூர் முன் வந்து நிற்கிறது பிரெக்சிட் பிரச்னை.

பிரெக்சிட் ஒப்பந்தம்

பிரெக்சிட் ஒப்பந்தத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் 29ம் தேதி இங்கிலாந்து வெளியேற வேண்டும். இதற்கு முன் இங்கிலாந்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருக்கும் எந்த நாட்டிற்கும் எளிமையாக சென்று வந்து வர்த்தகம் செய்யலாம். ஆனால், இந்த விலகலுக்குப் பிறகு இரு நாடுகளும் எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிரிட்டன் வெளியே வருவது சந்தேகமே. பிரெக்சிட் காலக்கெடுவை நீட்டிக்க இங்கிலாந்தும் கோரி வருகிறது. இந்த விவகாரத்தால், இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி உலக வர்த்தகமே பாதிப்படைந்துள்ளது.

சுதந்திர வர்த்தகம்

பின்னலாடை தொழிலுக்குப் பெயர் போன திருப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. பிரெக்சிட் வெளியேற்றத்திற்குப் பிறகு அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் சிக்கல்கள் எழலாம் என்று கூறப்படுகிறது. இது பற்றி ஈடிவி பாரத்திடம் பேசிய திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம், "பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதால், ஆர்டர்கள் முன்கூட்டியே அனுப்புமாறு அந்நாட்டு நிறுவனங்கள் கோரி வருன்றனர். வருங்காலங்களில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் இருநாடுகளும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade agreement- FTA ) கையெழுத்திடப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

Last Updated : Mar 23, 2019, 10:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details