நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கி தற்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையான பி.எஸ்.சி. சென்செக்ஸில் இந்த வங்கியின் மொத்த சந்தையின் மதிப்பு ரூ.8.05 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இதையடுத்து எட்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பை கடந்த, நாட்டின் முதல் வங்கி என்ற பெருமையை இந்த வங்கி பெற்றுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த வங்கியின் பங்குகள் சுமார் 15 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.