தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 6.43% பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி வங்கி - எச்.டி.எஃப்.சி வங்கி ரிலையன்ஸ் கேப்பிடல்

டெல்லி: ரிலையன்ஸ் குழுமத்தின் முதலீட்டு நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடலின் 6.43 விழுக்காடு பங்குகளை எச்.டி.எஃப்.சி. வங்கி வாங்கியுள்ளது.

HDFC
HDFC

By

Published : Apr 25, 2020, 11:18 PM IST

கடந்த ஓராண்டு காலமாகவே ரிலையன்ஸ் குழுமம் தனது கடன்களை குறைக்கும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனம் சௌதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனத்திடம் தனது பங்குகளை விற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஜியோ நிறுவனத்தின் 9 விழுக்காடு பங்குகளை முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் வாங்கியது.

இந்நிலையில், அண்ணன் முகேஷ் அம்பானி வழியில் அனில் அம்பானியும் களமிறங்கியுள்ளார். அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கேப்பிடல் முதலீட்டு நிறுவனத்தின் 6.43 விழுக்காடு பங்குகளை எச்.டி.எஃப்.சி நிறுவனம் வாங்கியுள்ளது.

இதன்படி, அந்நிறுவனத்தின் 25.27 கோடி பங்குகளை தலா 10 ரூபாய் விகிதம் 252 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.55 விழுக்காடு உயர்வைச் சந்தித்துள்ளது.

இதையும் படிங்க:உலகின் முன்னணி டிஜிடல் சக்தியாக இந்தியாவை மாற்றுவோம் - அம்பானி நம்பிக்கை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details