டெல்லியில் 38ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி சம்மந்தமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
- லாட்டரிக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை லாட்டரி விற்பனைத் தடை செய்தியிருந்தாலும், பல மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் பெரும் அளவில் விற்பனை ஆகி வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசு நடத்தும் லாட்டரிக்கு 12 விழுக்காடும், அரசு அங்கீகாரத்துடன் மாநிலங்களுக்கு வெளியே விற்கப்படும் லாட்டரிக்கு 28 விழுக்காடும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு வகையான லாட்டரிக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
- வோவன் பைகள் மற்றும் வோவன் இல்லா பைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி
வோவன் பைகள் மற்றும் வோவன் இல்லா பைகளுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுவதாகக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
- வடகிழக்கு மாநிலங்களுக்கு 2019 நவம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி நீட்டிப்பு