கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூலை மாதம், நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1.15 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலாகியுள்ளது. முன்னதாக, அதிகபட்சமாக, 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 1.14 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரியாக வசூலானது.
கடந்த 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் அதிக அளவில் வரி வசூலாகியுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சுருங்கிய நிலையில், தற்போது அதிக அளவில் வரி வசூலாகியுள்ளது பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்புவதை காட்டுகிறது.