மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், மத்திய வருவாய் வாரியங்கள் சட்டம், 1963-இன் கீழ் உருவாக்கப்பட்ட இந்த இரு வாரியங்களை இணைக்கும் திட்டம் அரசிடம் இல்லை என்பதால் இதுதொடர்பாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானதாகும்.
பகுதிவாரியான அதிகார வரம்பில் கைப்பட செய்யப்பட்ட மதிப்பீட்டில் இருந்து முழுக்க மின்னணு சார்ந்த முகம் தேவைப்படாத மதிப்பீட்டுக்கு மாறுதல், மின்னணு சரிபார்த்தல் அல்லது பரிவர்த்தனைகள் மற்றும் முகம் தேவைப்படாத மேல் முறையீடுகள் என பெரிய அளவில் வரிசெலுத்துவோருக்குத் தோழமையான சீர்த்திருத்தங்களை நிதி அமைச்சகம் செய்து வரும் வேளையில், அமைச்சகத்தின் உரிய அதிகாரிகளிடம் உண்மைகளை சரிபார்த்துக் கொள்ளாமல் வெளியிடப்பட்டுள்ளது.
இணைப்புப் என்பது வரி நிர்வாக சீர்த்திருத்தங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளில் ஒன்றாகும். ஆணையத்தின் அறிக்கையை விரிவாகப் பரிசீலனை செய்த அரசு, இந்தப் பரிந்துரையை ஏற்கவில்லை.