கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பல முன்னணி வங்கிகள் வாராக்கடன் உள்ளிட்ட நிதிச் சிக்கல்களால் அவதிப்பட்டு வருகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் இணைந்துள்ளது.
இன்று மாலை ஆறு மணி முதல் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வரை லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கத் தடை விதித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லக்ஷ்மி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாகவே கடும் நிதிச் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வங்கியின் எம்.டி, சி.இ.ஓ உள்ளிட்ட ஏழு இயக்குநர்களை நீக்க வங்கியின் பங்குதாரர்கள் குழு முடிவெடுத்தது.