தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

பெட்ரோலையும் புடலங்காயையும் இனி ஒன்றாக வாங்கலாமாம்...! - டீசல்

டெல்லி: பல்பொருள் அங்காடிகளில் பெட்ரோல், டீசலை விற்க மத்திய அரசு அனுமதிக்கவுள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் பெட்ரோல் மற்றும் டீசலை விற்க மத்திய அரசு அனுமதிக்கவுள்ளது.

By

Published : Jun 18, 2019, 11:23 AM IST

தற்போது பெட்ரோல், டீசல் விற்கும் இடங்களில் மற்ற பொருள்கள் விற்கப்படுவதில்லை. இதனை மாற்றும் வகையிலும் பெட்ரோல், டீசல்களை பயனர்கள் எளிதில் வாங்கும் வகையில் மாற்ற பல்பொருள் அங்காடிகளிலும் பெட்ரோல் டீசல் விற்பனைகளை அனுமதிக்க மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த முடிவானது 100 நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்ப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பின் மூலம் பல தனியார் நிறுவனங்களும் இத்துறைக்குள் நுழைய ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details