பிரதமராக மோடி பதவியேற்றதைத் தொடர்ந்து, டிஜிட்டல்மயமாக்கலுக்கு இந்தியா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துவருகிறது. இதன் ஒரு அங்கமாக, 'கூகுள் ஃபார் இந்தியா' என்ற நிகழ்வு நடத்தப்பட்டுவருகிறது. இதன் ஆறாவது ஆண்டு விழா இன்று நடைபெறவுள்ள நிலையில், அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கூகுள் ஃபார் இந்தியா டிஜிட்டல்மயமாக்கல் நிதியை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சியின் மூலம், அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். ஒண்றினைந்து சரியான அளவில் முதலீடு செய்வதன் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை இதன் மூலம் தெரியப்படுத்துகிறோம்.