2015ஆம் ஆண்டு, இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களில் இலவச வை-பை சேவை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுள் நிறுனத்தின் உதவியுடன் இந்தச் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் வழங்கிவந்தது. இந்நிவையில், இதிலிருந்து கூகுள் விலகவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.
இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைவருக்கும் இணைய சேவை வழங்க ஐந்து ஆண்டுகளுக்கு முன் இத்திட்டத்தை தொடங்கினோம். ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. மக்களால் இப்போது எளிதாகவும் குறைவான கட்டணத்திற்கும் இணைய சேவையை நுகர முடிகிறது.
குறிப்பாக இந்தியாவில்தான் சர்வதேச அளவில் இணையக் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. டிராய் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய இணையக் கட்டணம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 95 விழுக்காடு குறைந்துள்ளது. இந்தியர்கள் மாதத்திற்கு சராசரியாக 10 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகின்றனர்.