தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

ரிலையன்சில் ரூ.3,675 கோடி முதலீடு செய்யும் ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் - ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ரூ.3,675 கோடி ரூபாய் முதலீடு

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ரூ.3,675 கோடி ரூபாய் முதலீடு செய்ய சர்வதேச பங்கு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் முன்வந்துள்ளது.

Reliance Retail
Reliance Retail

By

Published : Sep 30, 2020, 7:53 PM IST

நாட்டின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சர்வதேச பங்கு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ரிலையன்சின் 0.84 விழுக்காடு பங்குகளை மூன்று ஆயிரத்து 675 கோடி ரூபாய்க்கு வாங்கவுள்ளதாக அட்லாண்டிக் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தாண்டு தொடக்கத்தில் இதே ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் ரூ.6,598.38 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே, சர்வதேச நிறுவனங்களான அமேசான், வால்மார்ட், சில்வர் லேக், ஃபேஸ்புக் எனப் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன.

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது, கடந்த ஒரு வருடத்தில் 73 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சந்தை நிலவரம் : ஏற்றம் கண்ட மும்பை பங்குச்சந்தை

ABOUT THE AUTHOR

...view details