இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக் கொள்கைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ரெப்போ வட்டி விகிதம் எவ்வித மாற்றமுமின்றி நான்கு விழுக்காடாகவே தொடர்ந்து இருக்கும் என்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 விழுக்காடாகவே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், 2020-21ஆம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.5 விழுக்காடு சரிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, 2020-21 நிதியாண்டில் 9.5 விழுக்காடு வரை இந்தியப் பொருளாதாரம் சரியும் என்று ரிசர்வ் வங்கி கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா ஊரடங்கு காரணமாக 2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 23.9 விழுக்காடு சரிவடைந்திருந்தது. அதேநேரம் இரண்டாம் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் எதிர்பார்த்தைவிட நல்ல முறையில் மீண்டது. இரண்டாம் காலாண்டில் வெறும் 7.5 விழுக்காடு மட்டுமே பொருளாதாரம் சரிந்திருந்தது.
இன்று சக்திகாந்த தாஸ் மேலும் கூறுகையில், "இந்த நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் நமது பொருளாதாரம் வளர்ச்சி 0.1 விழுக்காடு வளர்ச்சியுடன் நேர்மறைப் பாதைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். அதேபோல நான்காம் காலாண்டில் பொருளாதாரம் 0.7 விழுக்காடு வரை வளரும் என்று எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் சுயாதீன மதிப்பீட்டு அலுவலகத்தின் முன்னாள் மூத்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சரண் சிங் கூறுகையில், "இரண்டாம் காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) பெருநிறுவன முடிவுகள் நல்ல வகையில் இருந்தன. அதேபோல, பண்டிகை காலம் என்பதால் தேவையும் அதிகரித்திருந்தது.