டெல்லி: 2020-21ஆம் ஆண்டிற்கான ஐடி (வருமான வரி) மற்றும் ஜிஎஸ்டி (சரக்கு சேவை வரி) தாக்கல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி, 2021 பிப்ரவரி 15ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபர் வருமான வரி தாக்கல் செய்யும் தேதி டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் வரும் ஜனவரி 15ஆம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது.
இதேபோல் 2019-20 ஜிஎஸ்டி ஆண்டு வருமான கணக்கு தாக்கல் தேதியும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவிட் பெருந்தொற்று காரணமாக, வரி செலுத்துபவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரி செலுத்தியவர்களுக்கு ரீஃபண்ட் செய்த நிதித்துறை அமைச்சகம்!