பெங்களூரு: மின் வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம் தங்களின் சேவைகளை திறன்பட விரிவாக்க ஃபிளிப்கார்ட்திட்டமிட்டுள்ளது. மேலும், பயனர்களுக்கு ஆகுமெண்டெட் ரியாலிட்டி மூலம், இணையதளத்தில் பொருள்கள் வாங்குவதில் புதிய அனுபவத்தை கொடுக்கமுடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஸ்கேபிக் என்பது மேகக் கணினி அடிப்படையிலான ஒரு ஏஆர் தளமாகும். இது ஆகுமெண்டட் ரியாலிட்டி (ஏஆர்), 3டி உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிட உதவுகிறது. முன்னதாக இ-காமர்ஸ் தளங்களுக்கு தங்களின் சேவையை ஸ்கேபிக் அளித்துவந்தது.
மேலும், சந்தைப்படுத்தலுக்கான தொழில்நுட்பத்தையும் ஸ்கேபிக் கையாண்டுவந்ததாக அதன் இணை நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்கேபிக் நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்களையும் ஃபிளிப்கார்ட்தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.