கரோனா லாக்டவுன் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், மத்திய அரசு தற்சார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கோடிக்கு நிதிச் சலுகையை வெளியிட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே விவசாயிகளுக்காக பிரத்யேகமாக பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் என்ற பெயரில் நிதிச் சலுகை அளித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-21ஆம் நிதியாண்டில் இதுவரை அறிவிக்கப்பட்ட, மேற்கண்ட திட்டங்கள் மற்றும் மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளைத் தவிர்த்து எந்தவித புது அறிவிப்புகளும் நடப்பாண்டில் செயல்படுத்தப்படாது.