தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

வங்கி மோசடி வழக்கில் ரூ.11.85 கோடி சொத்துக்களை இணைத்த அமலாக்கத் துறை...! - வங்கி மோசடி வழக்கு

டெல்லி: வங்கி மோசடி வழக்கு தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டம் 2002-இன் (பி.எம்.எல்.ஏ) கீழ் ரூ .11.85 கோடி மதிப்புள்ள சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் இணைத்துள்ளது.

ed-attaches-assets-worth-rs-11-dot-85-cr-in-connection-with-bank-fraud-case
ed-attaches-assets-worth-rs-11-dot-85-cr-in-connection-with-bank-fraud-case

By

Published : Sep 25, 2020, 2:30 AM IST

சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட ரூ.2,240 கோடி வங்கி மோசடி வழக்கில் ரூ.11.85 கோடி சொத்தை அமலாக்கத் துறை இணைத்துள்ளது.

அமலாக்கத் துறையினரின் விசாரணை பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டு சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் இயக்குநர்கள், சஞ்சய் ஜெயின், ராஜீவ் ஜெயின் உள்ளிட்ட நபர்கள் பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ. 2,240 கோடியை போலி பதிவுகள் மற்றும் கணக்கு மூலம் கடன் வாங்கியதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில் தற்போது சூர்யா விநாயக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களுடைய நகரக்கூடிய சொத்துகளான ரூ.11.85 கோடி சொத்தை அமலாக்கத் துறை இணைத்துள்ளது.

இதையும் படிங்க:முதலாளி நண்பர்களின் நலனுக்காக ஏழைகளைச் சுரண்டும் மோடி அரசு - ராகுல் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details