தங்கப் பத்திரங்கள் என்பது அரசால் விற்பனை செய்யப்படுவது ஆகும். இந்தப் பத்திரங்கள் மத்திய அரசின் சார்பாக ரிசர்வ் வங்கியால் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், 2020-21ஆம் ஆண்டின் தங்கப்பத்திரம் விற்பனையானது முதலீட்டாளர்களுக்காக ஜனவரி 11 முதல் 15 வரை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
தங்கப் பத்திரங்களுக்குச் சிறப்புச் சலுகை அறிவிப்பு! - தங்க பத்திரங்களை டிஜிட்டலில் வாங்குபவர்களுக்கு அரசாங்கம் சிறப்பு சலுகை
டெல்லி: இந்தாண்டின் தங்கப் பத்திரங்களை வாங்குபவர்கள் டிஜிட்டல் முறையைப் பின்பற்றினால் கிராமிற்கு 50 ரூபாய் சலுகை பெறலாம் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்போது, அந்தத் தங்கப்பத்திரங்களை டிஜிட்டலில் வாங்குபவர்களுக்கு அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. நிதி அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இத்திட்டத்திற்கு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு, தங்கப் பத்திரத்தின் வெளியீட்டு விலை ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.5,054 ஆக இருக்கும்.
இல்லையெனில், சந்தா காலத்தில் பத்திரத்தின் வெளியீட்டு விலை கிராமுக்கு ரூ.5,104 ஆக இருக்கக்கூடும். எனவே, டிஜிட்டம் முறையைப் பின்பற்றுபவர்களுக்கு கிராமிற்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. பார்ப்பதற்குச் சிறிய தொகை என்றாலும், மொத்தமாக வாங்குகையில் பெரிய மாற்றம் பணத் தொகையில் வரும் எனத் தெரிகிறது. தங்கப் பத்திரங்கள் ஆண்டுக்கு 2.50 விழுக்காடு என்ற விகிதத்தில் வட்டி தருகிறது.