பெட்ரோல், டீசல் விலையை அந்தந்த எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, கரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதில், ஒருகட்டத்தில் பெட்ரோல் விலையைத் தாண்டி டீசல் விலை விற்பனையானது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு டீசல் விலை முதல்முறையாக இறக்கத்தைக் கண்டுள்ளது. 82 நாட்கள் தொடர் உயர்வை சந்தித்து வந்த டீசல் விலை, லிட்டருக்கு 16 காசுகள் சரிந்து 78 ரூபாய் 71 காசுகளுக்கு விற்பனையானது.
கரோனா பொது முடக்கம் காரணமாக பொதுப் போக்குவரத்து கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து முடக்கத்தைக் கண்டிருந்ததால், வருவாய் சரிவை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வுக் கொள்கையை கடைபிடித்தன. அரசும் கச்சா எண்ணெய்க்கான வரியை உயர்த்தியது. இந்த விலை உயர்வு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் விலையில் ஸ்திரத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க:ஆகஸ்ட் மாதம் முன்னேற்றத்தைக் கண்ட சேவைத் துறை நடவடிக்கைகள்