தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

உலக வங்கித் தலைவராக டேவிட் மால்பாஸ் தேர்வு - உலக வங்கி

வாஷிங்டன்: ட்ரம்ப் அரசாங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்த டேவிட் மால்பாஸ் உலக வங்கியின் 13வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக வங்கி

By

Published : Apr 6, 2019, 1:59 PM IST

Updated : Apr 6, 2019, 3:32 PM IST

அமெரிக்காவில் ட்ரம்ப் அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை கருவூலத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் டேவிட் மால்பஸ். ட்ரம்ப் ஆட்சியில் பல்வேறு நிர்வாக அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் மால்பாஸ் பதவி வகித்துள்ளார். இவரை கடந்த மாதம் உலகவங்கித் தலைவர் பொறுப்புக்கு டொனாலட் ட்ரம்ப் முன்மொழிந்தார். இந்நிலையில் நேற்று, 63 வயதான மால்பாஸை தலைவர் பதவிக்கு உலகவங்கியின் நிர்வாகக் குழு ஒருமனதாக தேர்வுசெய்தது. இதையடுத்து ஏப்ரல் 9ஆம் தேதி புதிய தலைவராக மால்பாஸ் பதவியேற்கவுள்ளார்.

டேவிட் மால்பஸ் தேர்வு

புதியத் தலைவரான டேவிட் மால்பஸ் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான ரொனால்ட் ரீகன் மற்றும் ஜார்ஜ் புஷ் ஆகியோரிடமும் பதவி வகித்துள்ளார். மேலும் இதற்கு முன் அவர், உலகவங்கி சீனாவுக்கு அளவுக்கு அதிகமாக கடன் உதவிகளை அள்ளித் தருவதாகவும், தான் பொறுப்பேற்றால் அதைச் சீர்செய்வேன் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். எனவே புதிய தலைவரின் நடவடிக்கைகள் குறித்து உலகப்பொருளாதார நிபுணர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

டேவிட் மலாபஸ்
Last Updated : Apr 6, 2019, 3:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details