கோவிட் 19 காரணமாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக திவால் சட்டத்தின் மூன்று முக்கியப் பிரிவுகள் மேலும் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு திவால் சட்டத்தின் 7,9,10 ஆகிய பிரிவுகள் ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்திலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் இது அடுத்த மூன்று மாதங்களுக்கும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 பொதுமுடக்கத்தால் பல்வேறு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதை அடுத்து அந்நிறுவனங்களை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும், அந்நிறுவனங்களின் நிதிநிலை சீராக இந்நடவடிக்கை முக்கியப் பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.