தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

மாநிலங்களுக்கு ரூ.19,950 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு - மத்திய அரசு தகவல் - ஜிஎஸ்டி இழப்பீடு

டெல்லி: கடந்த திங்கள்கிழமை மத்திய அரசு, இழப்பீடாக 19,950 கோடி ரூபாயை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Central govt releases
Central govt releases

By

Published : Feb 21, 2020, 8:51 AM IST

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசால் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பல தடைகளுக்கு இடையே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பால், ஐந்து ஆண்டுகளுக்குள் மாநில அரசுக்கு நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டால், அந்த இழப்பீட்டை சரிசெய்ய மத்திய அரசு நிதி வழங்குவதாக உறுதியளித்தது.

அதன் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்கி வந்த நிலையில், மீண்டும் கடந்த திங்கள்கிழமை 19,950 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் இதுவரை 1,20,498 கோடி ரூபாயை மாநில அரசுக்கு வழங்கியுள்ளதாகவும் சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த போதே பல தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டு இருந்த நிலையில்,மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய முட்டாள்தனம் என பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சுவாமி சாடியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வோடபோன்-ஐடியா நிறுவனம் 1,000 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியது!

ABOUT THE AUTHOR

...view details