தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சுங்க விலக்குகள், சட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கலாம் - சிபிஐசி அழைப்பு - சிபிஐசி

2020-21ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதுள்ள சுங்க விலக்குகளையும், சட்டங்களையும் மறுஆய்வு செய்யப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி சுங்க விலக்குகள், சட்டங்களை மதிப்பாய்வு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க பங்குதாரர்களுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம்

By

Published : Jul 28, 2020, 12:44 AM IST

டெல்லி:தற்போதுள்ள விலக்குகள் மற்றும் சுங்கச் சட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான செயல்முறை குறித்த பரிந்துரைகளை வழங்க பங்குதாரர்களுக்கு, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அழைப்பு விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 21ஆம் தேதிக்குள் சிபிஐசி இதுகுறித்த கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. அதையடுத்து செப்டம்பர் மாதத்திற்குள் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளைக் கொண்டு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று சிபிஐசி தெரிவித்துள்ளது.

2020-21ஆம் ஆண்டுக்கான நிதியறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதுள்ள சுங்க விலக்குகளையும், சட்டங்களையும் மறுஆய்வு செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

கரோனாவுக்கு பிந்தைய காலத்தில் 'டோனட் பொருளாதாரம்' ஏன் முக்கியமானது?

முன்னதாக, மத்திய நேரடி வரிகள் வாரியமும், மத்திய மறைமுக வரிகள் வாரியமும், இருதரப்பு தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பிரமோத் சந்திர மோடி, மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் எம். அஜீத் குமார் ஆகியோர், இருதரப்பு உயர் அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

2015ஆம் ஆண்டில் இந்த இரு வாரியங்களுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பதிலாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு பிறகு, ஜிஎஸ்டி அறிமுகம், ஜிஎஸ்டிஎன் ஆகியவை சேர்க்கப்பட்டன.

வரும் காலங்களில் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொடும் - காரணம் என்ன?

கையெழுத்திடப்பட்ட நாள் முதல் நடைமுறைக்கு வந்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் வாரியங்களுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒத்திசைவுக்கான புதிய தொடக்கமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details