பீசா தொழிலில் சிறந்து விளங்கும் டாமினோஸ் தனது அடுத்த முயற்சியாக தானாகவே செயல்படும் தானியங்கி மினி வேன் மூலமாக பீசாவை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
இனி ஆர்டர் செய்யும் பீசா தானாகவே வருமாம்...! - pizza
மிச்சிகன்: டாமினோஸ் பீசா நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக, வாடிக்கையாளர்கள் பீசா ஆர்டர் செய்யும்போது, தானியங்கி வாகனம் மூலம் தானாகவே அவர்கள் குறிப்பிடும் இடத்திற்கு வந்து சேர்ந்துவிடும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளனர்.
இதற்கான சோதனை ஓட்டம் சிறிய அளவில் ஹவுஸ்டன் (Houston) நகரில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த வருட இறுதியில் நியூரோ நிறுவனத்தால் தயாாிக்கப்பட்ட ஆா்.ஒன். (R1) மினி டெலிவரி வேனில் பீசா டெரிவரி செய்யப்படும்.
ஆா்.ஒன். வாகனத்தில் ஓட்டுநர்கள் அமர்வதற்கு இருக்கைகள் இருக்காது. மேலும் வாகனம் திசைமாறாமல் ஜிபிஎஸ்-இல் உள்ள இடத்திற்கு மணிக்கு 25 மைல் வேகத்தில் வந்து சேர முடியும். இந்நிலையில் வாகனம் வீட்டிற்கு வந்தவுடன் பீசா பெட்டியை திறப்பதற்கு கைப்பேசிக்கு வரும் ஓடிபி எனப்படும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணை வைத்து திறந்து எடுத்துக் கொள்ளலாம்.